எச்.சி.எல் நிறுவனம் பெயரில் நூதன மோசடி.. பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார்!
சென்னை: எச்.சி.எல் நிறுவத்தில் பகுதி நேர வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் விளப்பரங்கள் வந்துள்ளன. அதனை பார்த்து பலர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். கார்த்திக், திவ்யா உள்ளிட்ட மூன்று பேர் தங்களை எச்.சி.எல் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி எனக் கூறி, விணப்பித்த ஆயிரக்கணக்கானோரிடம் தலா ரூ.4,000 அளவில் நாற்பது லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளனர். மென்பொருள் நிறுவனம் வேலைக்கு ஆள் சேர்ப்பது போல் நேர்த்தியாக நேர்காணல் நடத்தியதுடன், தேர்வானவர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சியும் கொடுத்து அடையாள அட்டையும் வழங்கியுள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்தே வேலைப்பார்க்க மடிக்கணினி வழங்குவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். நீண்ட நாட்கள் ஆகியும் மடிக்கணினி வராததால் அவர்கள் எச்.சி.எல் நிறுவத்தை அனுகிய போது தான் இந்த நூதன மோசடி அரங்கேறியது தெரிய வந்துள்ளது. திருமண தகவல் இணையதளம் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் மோசடியில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. இது தவிர பலரை ஏமாற்றி பணத்தை பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment
thanks for your valuable feedback