Thursday, 19 April 2018

10 ஆண்டு பாலியல் சாம்ராஜ்ஜியத்தை ஒரே நாளில் எப்படி கூற முடியும் : போலீசாரை திகைக்க வைத்த நிர்மலாதேவி



அருப்புக்கோட்டை: மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்து வசமாக சிக்கியுள்ள பேராசிரியர் நிர்மலாதேவி 10 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் சாம்ராஜ்யத்தை லாவகமாக நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது. சில மணி நேர விசாரணையிலேயே நிர்மலா தேவி அளித்த தகவல்கள் அருப்புக்கோட்டை போலீசாரை தலைசுற்ற வைத்துள்ளது. தான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியர் என்ற நிலையை எட்டிய அவர், பணத்திற்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், தடம் மாறியுள்ளார். தொழில் முறையாக மதுரை காமராஜர் பல்கலை கழகத்திற்கு சென்று வந்த போது அங்குள்ள பேராசிரியர்கள் சிலருடன் நிர்மலா தேவிக்கு கூடாநட்பு ஏற்பட்டுள்ளது. 

நாளடைவில் அது நெட்வொர்க்காக உருவெடுத்த இந்த கூட்டணி உயர்கல்வியில் கோலோச்சுபவர்கள் முதல் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள் வரை பாலியல் சேவையை விரிவுபடுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கல்லூரி மாணவிகள், இளம் விரிவுரையாளர்களுக்கு மதிப்பெண், பணம், பதவி ஆசையை காட்டி வலையில் வீழ்த்துவது நிர்மலா தேவியின் வழக்கமாக இருந்துள்ளது. 

குற்றாலம், கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு இன்ப சுற்றுலா அழைத்து செல்வது போன்ற புது புது யுக்திகளை கையாண்டு காரியத்தை கச்சிதமாக முடிப்பதிலும் அவர் கில்லாடியாக இருந்துள்ளார். இருந்த போதும் சற்றே ஏமாந்து தொலைபேசி மூலம் நடத்திய பேரம் சிக்கிக்கொண்டதாக போலீசாரிடம் வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் 10 ஆண்டு கதைகளை ஒரே நாளில் எப்படி கூற முடியும் என்று அவர் கேட்டதுதான் போலீசாரை கதிகலங்க வைத்துள்ளது.

No comments:

Post a Comment

thanks for your valuable feedback