Friday 29 December 2017

ராகுல் கூட்டத்தில் தகராறு: பெண் போலீஸ் - பெண் எம்எல்ஏ கும்மாங்குத்து


சிம்லா: காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆய்வு கூட்டத்திற்கு வந்த அக்கட்சியின் பெண் எம்எல்ஏவை பெண் போலீஸ் தடுத்ததால் ஏற்பட்ட மோதலில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்


சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சல பிரதேச தேர்தலில், காங்கிரஸ் தோல்வியடைந்து
 ஆட்சியை பா.ஜ.,விடம் பறி கொடுத்தது.
தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்ய கட்சி தலைவர் சிம்லா வந்தார்.
நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

மாறி மாறி
கூட்டத்தில் பங்கேற்க, காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷா குமாரி வந்தார். பாதுகாப்பில் இருந்த
பெண் போலீஸ் அவரை தடுத்து நிறுத்தினார். ஆத்திரமடைந்த ஆஷா குமாரி பெண் போலீஸ்
கன்னத்தில் அறைந்தார்.
பெண் போலீசும் பதிலுக்கு அவரை அறைந்தார். இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் அழைத்து சென்றனர். 

மன்னிப்பு
இது குறித்து ஆஷா குமாரி கூறுகையில், பெண் போலீஸ் என்னை திட்டி தள்ளிவிட்டார்.
 அவர் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்க வேண்டும்.
அவரது தாயார் வயது தான் எனக்கும் இருக்கும்.
நான் கோபப்பட்டிருக்கக்கூடாது என்பதை ஏற்று கொள்கிறேன்.
எனது நடவடிக்கைக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.